March 2, 2021

விவசாய கடன்கள் தள்ளுபடி, தமிழக முதல்வருக்கு, த.மா.க இளைஞரணி தலைவர் யுவராஜ் நன்றி…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிளைச்சிறையில் உள்ள தமாக நிர்வாகியை சந்தித்து விட்டு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், செய்தியாளர்களிடம் பேசிய போது, 12,100 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்தார்.

பொய்யான வாக்குறுதிகளை கூறி கடந்த நாடாளுமன்ற தேர்தலில்
திமுக வெற்றி பெற்றதாகவும், அதிமுக கூட்டணி வாக்குறுதி தராமலே விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் விதமாக தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய சலுகைகளை முதல்வர் அறிவிப்பார் எனவும், அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு கேட்போம் எனவும், கூறினார்.

திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்பதாகவும், கிராம சபை கூட்டம் என்பது கிராம சபை நாடகம் எனவும், எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வராவார் எனவும் யுவராஜ் தெரிவித்தார்.

நிழல். இன – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed