February 27, 2021

அறந்தாங்கியில், 66ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த திருவாப்பாடியில் உழவர் திருநாளை முன்னிட்டு 66ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த மாட்டுவண்டிகள் பங்கு பெற்றன.

பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு, பூஞ்சிட்டு மாடு என நான்கு பிரிவுகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவில் பொன்பேத்தி, தட்டாண்வயல், தினையாகுடி
நடுமாடுபிரிவில் செல்வனேந்தல், மேலமடை,மருங்கூர் கரிச்சான்மாடு பிரிவில்
கோட்டைபட்டிணம், சிங்கவனம், திருவாப்பாடி பகுதியை சேர்ந்த மாட்டுவண்டிகள் முதல், இரண்டாம், மூன்றாம்பரிசுகளை
தட்டி சென்றன.

பூஞ்சிட்டுமாடு பிரிவில் சுமார் 35 க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டதால் இருபிரிவுகளாக பிரித்து விட்டனர்.
இதில் முதலாவது பிரிவில் திருபூந்துருத்தி,
பூக்கொல்லை, தட்டான்வயல்,
பொன்பேத்தி பகுதியை சேர்ந்த மாட்டுவண்டிகள் பரிசுகள் பெற்றன.

இந்த பந்தைய விழாவினை அதிமுக ஒன்றிய செயலாளர் பெரியசாமி துவக்கி வைத்தார் பந்தய ஏற்பாட்டினை திருவாப்பாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *