கோவை, தேக்கம்பட்டியில் நாளை யானைகள் புத்துணர்வு முகாம் துவங்குகிறது …
1 min read
யானைகள் புத்துணர்வு முகாம், நாளை 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் உள்ள தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.

யானைகளுக்கு மதம் பிடித்து அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு மூலிகை உணவுகள், மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் நலவாழ்வு கருதியும், அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அதற்கு புத்துணர்வு அளிப்பதற்காகவும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை முதல் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன.
யானைகள் அனைத்தும் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய யானைகள் அனைத்தும் இன்று மதியத்திற்குள் வந்து சேர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.

முகாமின் துவக்க விழா நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் துவங்க உள்ளது.
யானை பாகன்கள் முகாமிற்கு வரும் போது கட்டில் கொண்டு வர வேண்டும் எனவும் யானைகளை அழைத்து செல்லும் வழியில் மின்சார ஒயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால் யானைகளை மிகவும் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து வர வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – சேகர்
நிழல். இன் – 8939476777