March 5, 2021

செங்குன்றம் சமூக கூட்டமைப்பு மற்றும் எலைட் பள்ளியின் சார்பில், சாலை நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க கையெழுத்து இயக்கம் நடத்தினர்…

1 min read

செங்குன்றம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் எலைட் பள்ளி குழுமம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, வாகன நெரிசல் பிரச்சினையைத் தீர்க்க கையெழுத்து இயக்கம் செங்குன்றம் கூட்டு சாலையில் நடைபெற்றது.

செங்குன்றம் சுற்றுவட்டார சமூக ஆர்வலர்கள், எலைட் பள்ளிக் குழுமம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணரவு மற்றும் வாகன நெரிசல் பிரச்சினை குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர் .

செங்குன்றம் கூட்டு சாலையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து செங்குன்றம் காவல்துறை ஆய்வாளர் சங்கர் எலைட் பள்ளிகுழும தாளாளர் பால் செபஸ்டின் மற்றும் செங்குன்றம் சுற்றுவட்டார ஊராட்சி மன்றத் தலைவர்கள், வியாபாரி சங்கங்கள், பொதுநலச் சங்கங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கத்தினர் கலந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி செங்குன்றத்தில் தினந்தோறும் ஏற்படும் வாகன நெரிசலுக்கு தீர்வுகான கையொப்பமிட்டனர்.

இதற்கு ஆதரவாக, ஏராளமான பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஆர்வமுடன் இந்த கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு சென்றனர்.

செய்தியாளர் – ரஞ்சித்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *