February 24, 2021

தேனியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம்…

1 min read

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்ட முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் சுருளிவேல் தலைமையிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் குறித்துப் பேசப்பட்டது,
நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தோழர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், இதற்கு மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி எத்தகைய போராட்டத்திற்கும் தேனி மாவட்டம் தயாராக இருக்கும், நிலையான காலநிலையில் உள்ள ஊழியர்களைய் 17 சி என்று பாரபட்சமில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிர்வாகத்தை கண்டித்து மாவட்டத்தில் எத்தகைய போராட்டத்திற்கும் அதிக உறுப்பினர்களைக் கொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் செயல்பட வேண்டும்

மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நமது தொழிற்சங்கத்தின் உண்மை தன்மையைய் புரியவைத்து அவர்களை நமது தொழிற்சங்கத்தில் இணைக்க வேண்டும். சம்பள பட்டியல் ரசீது கொடுக்காததை கண்டித்து மாவட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடுப்பது, மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் புதிதாக வந்த ஆம்புலன்ஸ்களை முறையாக பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்பட செய்தல், போன்ற தீர்மானம் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்பு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இனிவரும் காலங்களில் தேனி மாவட்டம் தொழிற்சங்கத்தில் முதன்மை மாவட்டமாக விளங்க வேண்டும் அதற்கு அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தற்போதைய ஓட்டுனர்கள், ஓய்வில் உள்ள ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *