அறந்தாங்கியில்,
பாரத பிரதமர் அறிவித்துள்ள 5 லட்சம் மதிப்பிலான, மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது…
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் LN புரம் பகுதியில், பிரதமர் அறிவித்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார்,
தொகுதி பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலு, நகரதலைவர் இளங்கோ, நகர பொதுச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் ஏழை மக்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், இந் நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய தலைவர் முருகேசன், பிஎம்எஸ் மாவட்ட அமைப்பாளர் தீபன், வர்த்தக பிரிவு ரெங்கையா, நகர மகளிரணி முத்துலட்சுமி மற்றும் நகர துணைத்தலைவர் ஜெயபாண்டியன், சிங்காரவேலன் மற்றும் அறந்தாங்கி நகர பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777