September 23, 2021

பொன்னேரி பகுதி
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ராமேஸ்வரத்தில் நடந்த, செயற்கைக்கோள்
விண்ணில் செலுத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்…

1 min read
Spread the love

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ-மாணவிகள் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தை அறிந்து கொண்டு அதில் அவர்களுடைய திறனை வளர்த்துக் கொள்வதற்காக ராமேஸ்வரத்தில், பள்ளி மாணவ-மாணவிகள் சொந்தமாக தயாரித்த 50 கிராம் எடையுள்ள 100 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களுடைய நினைவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் டிவி டவர் வளாகத்தில் நடந்தது. இந் நிகழ்ச்சியை, “ஏபிஜே அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ” குழுவின் ஆலோசகர் கோகுல் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

ஐயா அப்துல்கலாம் அவர்களுடைய நீண்டநாள் கனவு நிறைவேறும் விதமாக, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்களுடைய திறன்களை பெருக்கி அவர்களுடைய சொந்த முயற்சியால், குறைந்த எடையுள்ள 50 கிராம் எடையில் 100 செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டு, அவைகள் நேற்று ராட்சத பலூன்கள் மூலமாக, விண்ணில் செலுத்தப்பட்டது.

அந்த செயற்கைக்கோள்கள் தரையில் இருந்து, 38 கிலோமீட்டர் தொலைவிற்கு மேலே சென்று, எட்டு மணி நேரம் அங்கேயே இருந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 1200 பேர் கலந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இந்நிகழ்ச்சியை, ஆனந்த் என்ற இளம் விஞ்ஞானி ஒருவர் இந்த மாணவ மாணவிகளுக்கு கணினியில் காணொளிக் காட்சி மூலமாக வகுப்புகள் நடத்தி, பயிற்சிகள் அளித்து தயார் செய்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள, உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி மாணவர்களும், பழவேற்காடு அரசு அரசு பள்ளி மாணவர்கள் பிரதாப், அபித், நிஷாந்த், தினேஷ், கௌதம், முகேஷ், ஆகியோர்
விடுதலை அறக்கட்டளையின் மூலமாக, ஆறுமுகம் மற்றும் குமரேசன் ஆகியோருடைய ஒத்துழைப்புடன், ராமேஸ்வரத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.


மேலும் இவர்களுடன் சென்னை அப்துல்கலாம் மக்கள் நல சங்கம் சார்பாக கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த 37 மாணவ மாணவிகளும், நித நிதர்சனம் பள்ளியின் 8 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பூரணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed