June 17, 2021

அறந்தாங்கியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சார்ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டத்திற்கு முன்னதாக
சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை மற்ற மாநிலங்களைப் போல் 1000 ரூபாய்லிருந்து இருந்து 3000 ஆக உயர்த்தி தர கோரியும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கிட கோரியும், தனியார் துறை பணிகளில் மாற்றுதிறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பி பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாவட்ட குழு தலைவர் தங்கவேல் தலைமையில் செல்வபாண்டியன், ஜெகதீஷ், சரவணன், மரியசெல்வம்,ரஞ்சன்,அபிநயா, முகமது ஆகியோர் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க
மாவட்ட தலைவர் கருணா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த காத்திருப்பு போரட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்தன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *