ஆவுடையார் கோயில் அருகே, பாலியல் தொல்லையால் படுகொலை செய்யப்பட்ட, சிறுமி ஜெயப்பிரியாவின் குடும்பத்திற்கு,
காங்கிரஸ் கட்சியின் சார்பில், 2லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது …
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை அடுத்த ஏம்பல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த, சிறுமி ஜெயப்பிரியா குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில், நிதி உதவி வழங்கப்பட்டது.

ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் பகுதியை சேர்ந்த சிறுமி ஜெயப்பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமையினால் படுகொலை செய்யப்பட்டார். இதனையறிந்த, காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் அறக்கட்டளை சார்பில், மாநில பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அறக்கட்டளையின் சார்பில், 1லட்சமும் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1லட்சம் என, இரண்டு லட்சரூபாயை இறந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் சுந்தர்ராஜ், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரியாகுப்புராஜா, மாவட்ட
பொதுச்செயலாளர் பெனட்அந்தோணிராஜ், ஆவுடையார்கோவில் வட்டார தலைவர் கூடலூர்முத்து, அறந்தாங்கி நகர காங்கிரஸ்தலைவர் வீராச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மதியழகன், அறந்தாங்கிவட்டாரத் தலைவர் முருகன், நிலையூர்சரவணன், விசுவநாதன்,
கராத்தேபாலு யோகேஸ்வரன், ஆனந்த், அரவிந்த், ராஜேஷ். கண்ணன், பெரியதம்பி, வீரமுத்து, தவசு, முரளி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவியினை வழங்கினர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777