திருவண்ணாமலையில், இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார்…
1 min read
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை அண்ணாமலையார் ஆலயத்தில் அதிகார நந்தி உள்ளிட்ட ஆறு நந்தி களுக்கு பச்சரிசி மாவு அபிஷேக போடு பால் தயிர் தேன் விபூதி மஞ்சள் சந்தனம் பன்னீர் வாசனை திரவியங்களால் வாசனை திரவியங்கள் பூக்களால் ஆன சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,
இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்பு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்தப் பிரதோஷத்தில் தேவாரப் பதிகங்கள் பாடி ஸ்தானிகம் ஆனந்த் சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க பஞ்ச கலை என்று அழைக்கப்படுகின்ற மகா தீபாராதனை நடைபெற்று தேவாரத் திருப்பதிகங்கள் பாடி மூன்றாம் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777