March 1, 2021

தேனி அருகே ஆண்டிபட்டியில், 108 ஆம்புலன்ஸில், பிரசவம் பார்க்கப்பட்டது. தாயும், சேயும் நலமாக உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி…

1 min read

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, 108 ஆம்புலன்ஸில் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, புள்ளிமான் கோம்பை அருகிலுள்ள கோட்டாபட்டியை சேர்ந்தவர் கருப்பணன், இவர் கூலி வேலை செய்து வருகிறார். இன்று இவரது மனைவி கெங்கையம்மாளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் இருந்த அவசர ஊர்திக்கு அழைப்பு வந்தது.பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கெங்கையம்மாளை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டு இருக்கும்போது, வழியில் கங்கையம்மாளுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், மருத்துவ நிபுணர் தங்கபாபு பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை நேரிட்டது,

அதில், கெங்கையம்மாளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய் மற்றும் குழந்தையை மேல்சிகிச்சைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அவசர காலத்தில் உதவும், 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து, தாயும், சேயும் நலமுடன் இருப்பதை அறிந்தும், 108 ஆம்புலன்ஸில் சைரன் சத்தம் மட்டுமே கேட்டு வந்த நிலையில், குழந்தையின் குவா குவா சத்தம் கேட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed