February 24, 2021

வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

1 min read

இன்று, தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கை களை வலியுறுத்தி, அரசு அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில்,
வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

அதில், தெலுங்கானா, புதுச்சேரி உட்பட பல மாநிலங்களை போன்று மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகையை ரூ.3,000 மாக உயர்த்தி வழங்கக்கோரியும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000 மாக உயர்த்திட கோரியும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின் படி, தனியார் துறைகளிலும் 5 % பணி இடங்களை சட்டப்பிரிவு 35 ன்படி உத்தரவாதப்படுத்த வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது, முக கவசம் இன்றி வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் காவல்துறையின் சார்பில், ஆய்வாளர் முகக் கவசங்கள் வழங்கியது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

செய்தியாளர் – மணிவண்ணன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *