கொத்தடிமைகள் ஒழிப்பு தினத்தில், சேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் /சார்பு நீதிபதிக்கு விருது…
1 min read
சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது, மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 09.02.2021 அன்று கொத்தடிமைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பிரசாத் ஸ்டூடியோவில், தமிழ் நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு காவல் துறை மற்றும் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிசன் இணைந்து நடத்திய விழாவில், கொத்தடிமைகளை மீட்கும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, சேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் / சார்பு நீதிபதி கே.வி.சக்திவேலுக்கு சாம்பியன் ஆப் ஜஸ்டிஸ் என்ற விருதினை தமிழ் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு ஜஸ்டிஸ் எஸ்.பாஸ்கரன் வழங்கினார்.

தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/மாவட்ட நீதிபதி கே.ராஜசேகர் மற்றும் கூடுதல் காவல் துறை இயக்குநர் சீமா அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2020 ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 42 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777