சேலத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் 13ம் ஆண்டு தொடக்க விழா…
1 min read
சேலத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 13வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, கட்சியின் கொடியினை ஏற்றிவைத்து 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்டம் அம்மாபேட்டை பகுதி சார்பில், முகமத்புறா பகுதியில், மனிதநேய மக்கள் கட்சியின் 13ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

அம்மாபேட்டை பகுதி தலைவர் வெல்டிங்பாபு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பக்ஷீ (எ) சையத் முஸ்தபா கலந்துகொண்டு, கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தார். பின்னர், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 200 பேருக்கு நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் முகமத்ரபீக், பகுதி துணை தலைவர் எஸ்.சையது பாருக்அலி, தமுமுக பகுதி செயலாளர் எஸ்.முகமது இப்ராகிம், மாவட்ட செயலாளர் சமியுல்லாகான், மாவட்ட துணை செயலாளர் சுஹேல்அஹமத், ஏ.முகமதுபிலால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777