September 24, 2021

தமிழகத்தின் முதல் தொகுதியான கும்முடிபூண்டி எம்.எல்.ஏ விஜயகுமார், தான் செய்த மக்கள் பணி குறித்து மனம் திறக்கிறார்..

1 min read
Spread the love

தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில், முதல் தொகுதி கும்மிடிப்பூண்டி தொகுதியாகும். ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்த தொகுதி, இயற்கை எழிலுடன் விவசாயத்தையும், தோட்டப்பயிர் தொழில்களையும் அடிப்படையாகக் கொண்டது. 80-களுக்கு பிறகு இந்த தொகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டியில், கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை என இரண்டு தாலுகாக்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என்ற இரண்டு பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய 178 குக்கிராமங்களை கொண்டதாகும். மேலும், இத்தொகுதியில் 131 ஊராட்சிகள் உள்ளடங்கியுள்ளன. அவைகள் கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகளும், எல்லாபுரத்தில் 43 ஊராட்சிகளும், பூண்டியில் 27 ஊராட்சிகளும் உள்ளன. இந்தத் தொகுதியில் ஏழு முறை அதிமுகவும், நான்கு முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் தற்போது பிரச்சினையாக இருக்ககூடிய ஒரே விஷயம் என்னவென்றால் இதில், அடங்கியுள்ள தனியார் அனல் மின் நிலையங்கள் மற்றும் உருக்கு ஆலைகள் போன்றவைகளில் இருந்து தினந்தோறும் வெளிவரக்கூடிய புகை மற்றும் மாசுக்கள் தான்.

தற்போது இந்த கும்மிடிப்பூண்டி தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய விஜயகுமார் அவர்களை நாம் நேரில் சந்தித்து இந்த தொகுதியில் இதுவரை அவர் செய்து இருக்கக்கூடிய வளர்ச்சி பணிகள் குறித்து விசாரித்தோம். அப்போது அவர் கூறுகையில்,

“எங்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கக்கூடிய ஒரு தொகுதியாகும். இங்கு பெரும்பாலும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய சார்ந்த தொழில்களையே செய்து வருகின்றனர். மேலும், பெரும்பாலானோர் விவசாய கூலிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் இத் தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. அவைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் சிறு மற்றும் குறு தொழில் செய்யக்கூடிய நிறுவனங்களாக உள்ளன, ஒரு சில பெரிய தனியார் அனல் மின் நிலையங்களும், இரும்பு உருக்கு ஆலைகள் போன்ற நிறுவனங்களும் இங்கு உள்ளன.

அவைகளில் கடினமான பணிகளில் வெளிமாநிலத்தவர்களும், மற்ற பணிகளில் இப்பகுதி கிராம இளைஞர்களும் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் பெற்றாலும், குறிப்பாக இத் தொழிற்சாலைகளினால் ஏற்படக்கூடிய காற்று மாசு ஒருபுறம் பாதிப்பை உருவாக்கும் வகையில் இருந்து வருகிறது. அவைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பல முயற்சிகளை நான் எடுத்திருக்கிறேன்”என்றார்.

மேலும்,”எங்கள் கும்மிடிப்பூண்டி தொகுதி மிகப்பெரிய அளவிலான பரப்பளவு கொண்டதாகும். எங்கள் தொகுதியில் கும்முடிபூண்டி, ஊத்துக்கோட்டை என்று இரண்டு தாலுகாக்களை உள்ளடக்கிய, 178 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதே போல் மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளும், எல்லாபுரம் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளும், பூண்டி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும் என மொத்தம் 131 ஊராட்சிகள் எங்கள் கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ளன. மற்ற சட்டமன்ற தொகுதிகளை விட இந்த தொகுதி மிகப்பெரிய தொகுதி ஆகும். இருந்தாலும் மற்ற தொகுதிகளை போல தான் இந்த தொகுதிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதனால், நான் மாண்புமிகு அம்மாவின் நல்லாசியுடன் ஆட்சி நடத்தி வரும் நமது தமிழக முதல்வர் அவர்களிடம் முறையிட்டு, கூடுதலாக நிதிகளை பெற்று சாலைகள் மற்றும் பல வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன்” என கூறினார்.

முன்னாள் முதல்வர், மறைந்த, மாண்புமிகு புரட்சித்தலைவி, அம்மா அவர்கள் தீவிர முயற்சியால், இந்த கும்மிடிப்பூண்டி தொகுதியில் உள்ளடங்கிய தேர்வாய் மற்றும் கண்ணன்கோட்டை இரண்டு ஏரிகளையும் இணைத்து மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை சுமார் 320 கோடியில் உருவாக்கினார். தற்போது அந்த ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு, சமீபத்தில் திறப்பு விழா நடைபெற்றது. அதில் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை சுற்றுவட்டார விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகள் பெற்று வருகிறார்கள். மேலும், அது சென்னைக்கு ஐந்தாவது மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

கும்மிடிப்பூண்டி பஜார் சாலை 17 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் கடைவீதி, சாலைகளை அகலப்படுத்தபட்டதுடன் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடைபாதையில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் பெரும்பாலும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் தான், அவர்களுடைய விளை நிலத்தில் விளைந்த பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இருந்தாலும் அது பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதினால் பொதுமக்களின் இடையூறுகளும் தீர வேண்டும், அதேபோல் நடைபாதை வியாபாரிகளுடைய வாழ்வாதாரமும் பாதிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் கும்மிடிப்பூண்டி வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்துப் பேசி பின்னர் அந்த நடைபாதை வியாபாரிகளுக்காக கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் பின்புறம் நடைபாதை வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விரைவில் கடைகள் அமைத்து தரப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டியில் மின் நிலையம் அருகே உள்ள தரைப்பாலம் தரம் உயர்த்தப்பட்டு உயர்மட்ட பாலமாக புதிதாக அமைக்கப்பட உள்ளது. மாநெல்லூர் பகுதியில் புதியதாக சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக கார்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தயாரிக்க 300 ஏக்கரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் புதியதாக 18 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. திருகண்டலம் அணைக்கட்டு 18 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.
பூண்டி-ஆற்றம்பாக்கம் தடுப்பணை 7 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாம்பாக்கம் தடுப்பணை எட்டு கோடியில் கட்டப்பட்டுள்ளது. ஒதப்பை கொசஸ்தலை ஆற்றின் சிறிதாக இருந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மெய்யூர் தரைமட்ட பாலம் உயர்மட்ட மேம்பாலமாக 16 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒதப்பை கிராம மக்களுக்கு, நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. அதை போக்கும் விதமாக 52 லட்சம் செலவில் இரண்டு போர்கள் போடப்பட்டு, மேலும் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு புதியதாக பைப் லைன் அமைத்து ஒதப்பை கிராமத்திற்கு குடிநீர் கொண்டு வந்து குடிநீர் தட்டுப்பாடு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கும்முடிபூண்டி பேருந்து பணிமனை புதியதாக அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக பெத்திக்குப்பம் பகுதியில் பேருந்து பணிமனை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி பாத்தபாளையம், குருராஜா கண்டிகை ஆகிய கிராமங்கள் வழியாக பேருந்து வசதி கேட்டு அப்பகுதி மக்கள் 45 வருடமாக கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது அந்த வழித்தடத்தில் புதியதாக பேருந்துகள் இயங்க வழிவகை செய்யப்பட்டு, தற்போது அந்த வழித்தடத்தில் பேருந்துகள் தொடர்ந்து இயங்கி வருகிறது வருகிறது. அதேபோல் ஆரணி, பாலவாக்கம், கள்ளுர் போன்ற கிராமங்களுக்கு புதியதாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாநெல்லூர்-ஆவடி புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுகிறது.

பெரியபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, 56 கோடி ரூபாய் செலவில் புதிதாக புறவழி சாலை அமைக்கப்பட உள்ளது.
கும்முடிபூண்டி தொகுதியில் எட்டு இடங்களில் புதியதாக பகுதிநேர நியாய விலை கடை உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.
அதேபோல் 8 நடமாடும் நியாயவிலைக்கடைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது போல் மேலும் பல வளர்ச்சி பணிகளை எனது தொகுதிக்கு நான் செய்து கொண்டு இருக்கிறேன். தற்போது, நினைவில் இருந்த ஒரு சிலவற்றை தான் உங்களிடம் நான் கூறியிருக்கிறேன், என கூறினார்.

மேலும், சமீபத்தில் உலகையே குலுக்கிய கொரோனா பரவல் மிக உச்சத்தில் இருந்த சமயத்தில், தமிழக முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி நான் நமது கும்மிடிப்பூண்டி தொகுதியிலுள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று கொரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்து தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறேன். அதன் விளைவாக நான் கொரோனா தொற்று பாதிப்பால் சில காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையை கூட இருந்தது. அப்போது தொகுதி முழுவதும் நான் கொரோனா உதவிப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சிகளில் என் இளைய மகள் என்னுடன் இருந்ததால், நோய்த்தொற்று குடும்பத்தாருக்கும் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால், அவர்களும் தனிமை படுத்தப்பட்ட சூழ்நிலையும் நிலவியது. ஆனால் கடவுளுடைய அருளால் நாங்கள் எந்தவித பெரிய பாதிப்புக்கும் உள்ளாகாமல் மீண்டு வந்திருக்கிறோம். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அது என்னுடைய தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற தாரக மந்திரத்தை உச்சரித்ததுடன், அதன் வழி நடந்த, எங்கள் புனித தாய் புரட்சித்தலைவி, “அம்மா” அவர்களுடைய வழியில், பயணித்து என்றும் மக்களோடு மக்களாகவே நான் இருக்குறேன். என உறுதிபட கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939376777

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed