திருவண்ணாமலை அருகே, வடிவேலு படத்தில் கிணற்றை காணோம் என, வரும் காமெடி போன்ற ஓர் நிகழ்வு அரங்கேறி உள்ளது…
1 min read
திருவண்ணாமலை அருகே அல்லிகொண்டபட்டு ஊர் பொதுமக்கள் கழிவரை, குடிநீர் இணைப்பு, குழாய், குளம் போன்றவை காணவில்லை, என புகார் அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் அல்லிகொண்டபட்டு கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி என்பவர் அல்லிகொண்டபட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

இவர் கிராமத்திற்கு வருவதில்லை, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு அல்லி கொண்டாபட்டு கிராமத்தில் தனிநபர் கழிப்பிடம், மற்றும் குழாய் இணைப்பு குளம். வெட்டுதல் ஆகிய பணிகளுக்கு ஊராட்சி மன்ற பொது நிதியிலிருந்து ரூ .10 லட்சத்திற்க்கும் மேல் பணம் எடுத்து கொண்டு ஊழல் செய்துள்ளார். மேலும் தனி நபர் கழிப்பிடம். குடிநீர் இணைப்பு 15 குடும்பத்திற்க்கு செல்ல வேண்டிய குடிநீர் இணைப்பை துண்டித்து, தனி நபருக்கு வழங்கியதாகவும், பணிகளை செய்யாமல் செய்து விட்டதாக பணம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அதே பகுதியில் தனிநபரிடம் பணம் பெற்று கொண்டு குடிநீர் இணைப்பு தருகிறார்.

இப்படி பலவிதமாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அப்பகுதி மக்களிடம் புதிய மின்சார இணைப்பு வழங்க ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கிறார். எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை மாவட்ட திட்ட இயக்குனரிடம் புகார் அளித்தனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல் இன் – 8939476777