திருவள்ளூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசியின் உடைய சொத்துக்கள், 41 ஏக்கர் நிலம் அரசுடமை ஆக்கப்பட்டது…
1 min read
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கின் சசிகலா, இளவரசி ஆகியோரின் 41 ஏக்கர் நிலம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வேளகாபுரம் என்ற கிராமத்தில் மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில், 41.22 ஏக்கர் புஞ்சை நிலம் சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் உள்ளன. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பின்படி, அரசுடமையாக்கப்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் பெயர்களில் 1995-ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட புஞ்சை நிலம் 41.22 ஏக்கர் அரசுடமையாக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலம் தமிழக அரசுக்கு சொந்தமானது எனவும், அந்த இடத்திலிருந்து வரும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Gபாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777