திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டே.வது…
1 min read
தை அமாவாசை தினமான இன்று திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தமிழகத்தில் முன்னோர் வழிபாடு என்பது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்ச்சி ஆகும்.
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தை அமாவாசை ஆகிய தினங்களில் தங்கள் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆத்மா சாந்தி அடையும் என்றும், பித்ரு தோஷம் ஏற்படாது என்றும் மக்கள் கருதுகின்றனர்.

மேலும், முன்னோர் ஆசியால் தங்கள் குடும்ப சுபகாரியங்களில் தடை ஏற்படாது என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அதனடிப்படையில் திருவண்ணாமலை அய்யங்குளக்கரையில் அமைந்துள்ள பழமையான அருணகிரிநாதர் கோவில் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர் .வேத விற்பன்னர்கள் உதவியுடன் தர்ப்பணம் செய்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மட்டுமின்றி பல கிராமங்களில் இருந்து ஏராளமா னோர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தர்ப்பணம் செய்து சென்றனர். மேலும் அம்மாவாசை தினங்களில் சித்தர் வழிபாடு சிறப்பானது என்பதால் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சேஷாத்ரி சுவாமிகள், ரமணர் மற்றும் குகைநமச்சிவாயர், அடிமுடி சித்தர் , மூக்கு பொடி சித்தர் உள்ளிட்டோர் சன்னதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
செய்தியாள் – மூர்த்தி
நிழல். இன் -8839476777