February 24, 2021

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில், சுற்றித் திரிந்த கால்நடைகளை, நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் அடைத்து வைத்தனர்.

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பட்டுக்கோட்டை பேராவூரணி சாலை கட்டுமாவடி சாலை ஆவுடையார் கோவில் சாலை காரைக்குடி புதுக்கோட்டை சாலையில் உள்ள பகுதிகளில் அதிகமான கால்நடைகள் சுற்றி திரிந்ததால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் தரப்பிலும் அரசு தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் நகராட்சி மண்டல இயக்குனர் அறந்தாங்கி நகராட்சி கமிஷனர் ஜீவா சுப்பிரமணியன், ஆலோசனைப்படி நகராட்சி பணியாளர்கள் அறந்தாங்கி நகரில் சுற்றித் திரிந்த 70 மாடுகளை பிடித்து நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் அடைத்து தீவனம் அளித்து பாதுகாத்து வருகிறார்கள்.

இது குறித்து நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சேகர் கூறியபோது போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் நகராட்சி கட்டுப்பாட்டில் அனைத்து மாடுகளும் பிடிக்கப்பட்டு பட்டினி இன்றி தீவனம் அளித்து வருகிறோம் அதை உரிய அபராதம் செலுத்தி மாட்டின் உரிமையாளர்கள் மாட்டை பிடித்துச்செல்லாம், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்றார்.

செய்தியாளர் – ஆனந்தன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *