இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, கலந்தாய்வு, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், சா.அருணன் கோரிக்கை…
1 min read
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்ட வில்லை ,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உட்பட ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கையை ஏற்று தற்போது பதவி உயர்விற்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்து பாட பிரிவிற்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வை உடனே நடத்தவேண்டும்.

அதே போன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு WP. No. 27085/2019 K. சம்பத் உள்ளிட்ட எழுவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பின்படி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTE) விரைந்து பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திட உத்தரவுவிட்டும் ஏழு வருடங்களாக கலந்தாய்வு நடத்தப்படவில்லை, பொதுவாக ஆசிரியர் கலந்தாய்வு அரசாணையில் BRTE க்கு தனியாக நெறிமுறைகளை பின்பற்றப்படும் என அறிவித்தும் இதுவரையில் பின்பற்றப்படவில்லை 2014 ஆம் ஆண்டு மூன்று வருட நெறி முறைகள் என்ற பெயரில் வட்டாரம் விட்டு வட்டாரங்கள் கட்டாய பணி மாறுதல் சென்ற 2700 BRTE க்கு அவர்கள் விரும்பிய BRC க்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

2014 ல் உபரி என்று சுமார் 400 ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) கட்டாய பணி மாறுதல் சென்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும் மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டுதல் மற்றும் அரசாணை 100 ன் படி BRC கட்டமைப்பு வலுப்படுத்துவது ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிச்சுமை அதிகரித்து பிற துறையின் பணிகளை ஒதுக்கீடு செய்வதைப் தவிர்க்க வேண்டும்
காலியாக பணியிடத்தை நிரப்பவேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அதன்
நிறுவனத் தலைவர் சா.அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777