பொன்னேரியில் ஆன்லைன் விளையாட்டால், மன உளைச்சலில், பள்ளி மாணவன், தூக்கிட்டு தற்கொலை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என். ஜி. ஓ நகரைச் சேர்ந்தவர் பாபு தனியார் நிறுவன ஊழியரான இவரது மகன் ராகேஷ்(14) பொன்னேரி வேலம்மாள் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தான், ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ராகேஷ் எப்போதும் கைபேசியில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளான்.

இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த மாணவன் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவனது பெற்றோர் மாடிக்குச் சென்று பார்த்தபோது. அங்கிருந்த அறையின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு கதவை தட்டி உள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம்அடைந்து. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது.

அங்கு சீலிங்கில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் சேலையை பயன்படுத்தி மாணவன் ராகேஷ் தூக்கிட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் ராகேஷை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்து. சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறையினர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் விளையாட்டால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்த மாணவன் ராகேஷ் அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777