வேதாரண்யத்தில், 32 வது சாலை பாதுகாப்பு மாதம், விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது….
1 min read
தமிழக நெடுஞ்சாலைத்துறை , நாகப்பட்டினம் கோட்டம் , வேதாரண்யம் உட்கோட்டம் சார்பில், வேதாரண்யம் நகர வீதிகளில் 32 வது சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, சாலை விபத்தை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேரணி நடைபெற்றது.

தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டவும் மாட்டேன், ஓட்டுவதற்கு அனுமதிக்கவும் மாட்டேன், சீட் பெல்ட் போடாமல் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட மாட்டேன், முன் செல்லும் வாகனங்களுக்கு 10 மீட்டர் இடைவெளி விட்டுச் செல்வேன், குறுகிய பாலம் மற்றும் வளைவுகளில் முந்த மாட்டேன்,
ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டுச் செல்வேன்,
மோட்டார் வாகனங்களை ஓட்டும்போது கைப்பேசி உபயோகிக்க மாட்டேன்,
சிக்னல் விளக்கு மற்றும் சாலை குறியீடுகளை மதித்து நடப்பேன், குடிபோதையில் வாகனங்களை இயக்க மாட்டேன். மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் சமிக்கை ஓலிகள் எழுப்பமாட்டேன்,
வாகன உரிமம் இன்றி வாகனத்தை இயக்கமாட்டேன்.

இது போன்ற சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும் வாய் வழியே உரத்தக்குரலில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் அனைவரும் உணரும் வகையில் வேதாரண்யம் நகர நான்கு முக்கிய வீதிகளில் பதாகைகளுடன் பேரணியாக வலம் வந்து 32 வது சாலைபாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுவதை கருப்பொருளாக கொண்டு வேதாரண்யம் நெடுஞ்சாலைத்துறை
உட்கோட்டம் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

விழிப்புணர்வு என்பது நாள்தோறும் நிழலாக தொடரும் உறவுகளும் நண்பர்களும் எல்லோரும் சொல்லுவது பத்திரமாக செல்லுங்கள் பார்த்துசெல்லுங்கள்
அனைவரும் விழிப்புடன் பயணிப்போம் அறிவுரைகள் என்பதைவிட விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் ,பொருளாதாரம இழப்புகளையும் ,உயிர் இழப்புகளையும் தவிர்ப்போம் அலட்சியம் வேண்டாம்
அனைவரும் கடைபிடிப்போம்.

செய்தியாளர் – நா.மணிவண்ணன்
நிழல். இன் – 8939476777