திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில், சுவர்கள் மற்றும் கோபுரங்களில் செடிகள் முளைத்து இருப்பதை அப்புறப்படுத்த, பக்தர்கள் கோரிக்கை…
1 min read
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கோபுரங்களில் செடிகள் முளைத்து கோபுரம் மற்றும் சுற்று சுவர்கள் சேதம் அடைந்துவிடும் அபாயம் உள்ளது என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடியது இங்கு மலையே சிவனாக நினைத்து வழிபடுகிறார்கள் வருடம்தோறும் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவது மிக சிறப்பு இதை காண்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

பௌர்ணமி சித்திரா பௌர்ணமி இத்தலத்தில் சிறப்பு வாய்ந்ததாகும். மற்றும் சிவராத்திரியன்று அடிமுடி காணா அண்ணாமலை என வைபவம் இங்கு நடக்கும் பார்வதிதேவிக்கு இடப்பாகம் கொடுத்த இடம் திருவண்ணாமலை ஆகும் தீபத்தன்று ஆணும் பெண்ணும் சரி என்று அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

அந்த நிகழ்வு வருடத்தில் தீபத்தன்று மட்டும் தான் நடைபெறும், அப்படிப்பட்ட அண்ணாமலையார் திருக்கோயிலில் கோபுரங்கள் மற்றும் சுற்று சுவர்களில் செடி முளைத்து காணப்படுகிறது. இதை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை உடனடியாக கோபுரங்கள் மீது முளைத்துள்ள செடிகளை அகற்றி கோபுரங்களை பாதுகாக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திடமும், இந்து அறநிலை துறையில் அதிகாரிகளிடமும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777