திருவண்ணாமலையில் நகராட்சி வாகனத்தை சிறை பிடித்தார், டிராபிக் ராமசாமி…
1 min read
இன்று
திருவண்ணாமலையில் அந்த மாவட்டத்தின் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் மாவட்ட மாநாட்டிற்கு அதன் மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் வந்திருந்தனர். அதே நிகழ்ச்சிக்கு வருகை தந்த, ஐயா டிராபிக் ராமசாமி அவர்கள் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட கல்குதிரை தர்கா தெருவில் சர்க்கார் பேலஸ் கல்யாண மண்டபம் அருகில் நகராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள் வாகன பதிவு எண் இல்லாமல் இயக்கியதை கண்டித்து, டிராபிக் ராமசாமி அந்த வாகனங்களை சிறை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

செய்திகள் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777