மாரடைப்பால் இறந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்க்கு, 1995-பேட்ஜ் காவலர்கள் சார்பாக நிதி உதவி வழங்கபட்டது…
1 min read
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த ஜக்கம்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அதை தொடர்ந்து, இறந்த குணசேகரன் அவர்களின் குடும்ப நலன் கருதி 1995ஆம் ஆண்டு திருச்சி காவலர் பயிற்சிப் பள்ளியில் அவருடன் பயிற்சியில் சேர்ந்த 1995-பேட்ஜ் காவலர்கள் சார்பாக திரட்டப்பட்ட ₹1,15,000/- நிதி உதவிக்கான காசோலையை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி அவர்கள், இறந்த குணசேகரன் மனைவி ரமா என்பவரிடம் வழங்கினார்.

செய்தியாளர் – அழகர்
நிழல். இன் – 8939476777