திருவண்ணாமலை அருகே, கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து, சம்பவ இடத்திேலேயே, 4 பேர் பலி…
1 min read
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபால் மற்றும் அவர் மனைவி பத்மப்பிரியா உட்பட அவர் உறவினர்கள் சதீஷ்குமார், சாந்தி மற்றும் ஒரு சிறுமி உள்பட 5 பேர் திருவண்ணாமலை மின் நகர் பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டுக்கு, காரில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்த கார், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி கிராமம் அருகே செல்லும் போது, எதிர்பாராத விதமாக திருவண்ணாமலையில் இருந்து பயணிகளைை ஏற்றி கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்துடன் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது,

அந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஸ்ரீ பால் மற்றும் அவருடைய மனைவி பத்மபிரியா, சத்தீஸ்குமார், சாந்தி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் சென்ற சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கார் மீது மோதிய அரசுப் பேருந்து 100 அடி தூரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர், அவர்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777