புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்,
“சாம் ரூமி மெடிக்கல் பவுண்டேஷன்” சார்பில், இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது…
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்,
சாம் ரூமி மெடிக்கல் பவுண்டேஷன் சார்பில், இலவச பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, சாம் ரூமி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் சுகந்த ராணி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில், அய்யனார் பிசியோதெரபி மருத்துவமனை தலைமை மருத்துவர் பாண்டித்துரை, டாக்டர் ஆரிப் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு, நரம்பு, மூட்டு, தசை, சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பு பிசியோதரபி சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்குபெற்ற பயனரிகளுக்கு சாம் ரூமி பவுண்டேசன் சார்பில் மருந்து, மாத்திரை, மற்றும் மூலிகை தைலங்கள் வழங்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை சாம் ரூமி மெடிக்கல் பவுண்டேஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தர்.
முகாமில்…. செவிலியர்கள்.. ஆர்த்தி, விசித்திரா, அபிராமி, முத்துலட்சுமி, நான்சி,கீர்த்திகா, உமா சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் முகாமில் கழுத்து வலி, தசை பிடிப்பு , மூட்டு வலி, தேய்மானம், தண்டுவட அழுத்தம் , குதிகால் வலி, கழுத்துப்பகுதி சிகிச்சை, பக்கவாதம், முகவாதம், உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு மருந்துகள் பவுண்டேஷன் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777