சேலத்தில், ஆதிவாசி மக்கள் மாநாடு, தரிசு நிலங்களுக்கான தடையாணையை நீக்கி, பட்டா வழங்க தீர்மானம்…
1 min read
தமிழக ஆதிவாசி மக்களின் தேர்தல் கோரிக்கை விளக்க மாநாடு, சேலம் சவுடாம்பிகா ஓட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, மாநில தலைவர் ஏ.ரெங்கநாதன் தலைமை வகித்தார். பட்டாபி ராஜா வரவேற்புரையாற்றினார். தமிழக ஆதிவாசி அமைப்புகளின் மாநில தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் குணசேகரன், துணைத் தலைவர் லீலாவதி, நாகபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இம்மாநாட்டில், வனஉரிமை சட்டம் 2006ன்படி பட்டியலிடப்பட்ட பழங்குடிகளுக்கும் வனம் சார்ந்து வாழ்வோருக்கும் தனிநபர் மற்றும் சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும். தரிசு நிலங்களுக்கான தடையாணை ஜிஓ 1168–/ 25.7.1989 ஐ நீக்கி ஆதிவாசி பழங்குடிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அல்லது விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிவாசிகளுக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அதோடு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சு வீடு கட்டுக்கொடுக்க வேண்டும்.

பழங்குடிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பழங்குடிகளுக்கான சட்டமன்ற தொகுதிகளை சுழற்சி முறையில் தேர்வு செய்ய வேண்டும். புலையர் இனமக்களை மீண்டும் பழங்குடி பட்டியலில் இணைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் நிலங்களை பழங்குடி அல்லாதோர் வாங்குவதையும், விற்பதையும் தடுத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில், ராசிபுரம் ஷியாமலா நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில் சேலம் ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு மலை பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777