பெரியபாளையத்தில் குறுவட்ட அலுவலகம் மற்றும் குடியிருப்பை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் திறந்து வைத்தார்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பகுதியிலும் குறுவட்ட அளவர் அலுவலக கட்டிடம் மற்றும் குடியிறுப்பு கட்டிடம் ₹17.26 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சி, திருவள்ளூர் மாவட்ட நில அளவர் பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .
இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ. கே.எஸ். விஜயகுமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கை ஏற்றி வைத்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊத்துக்கோட்டை தாசில்தார் குமார் , நில அளவை கோட்ட ஆய்வாளர் விஜயகுமார், வட்ட துணை ஆய்வாளர் பாரதி, சார் ஆய்வாளர்கள் கோபி, விஜயலட்சுமி, அரவிந்தன், மற்றும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் எல்லாபுரம் ஒன்றிய அவைத்தலைவர் விஜயன், பெரியபாளையம் அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், கிளை செயலாளர் பார்த்திபன், மற்றும் சுரேஷ், சுகுமார்,சத்யா, சங்கர்,ரமேஷ், தரணி ராஜ், ரவி, ஆகியோர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777
