மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில், இரவு பாடசலைக்கு நிர்வாகிகள் உதவி…
1 min read
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின், மாநிலத் தலைவர் டாக்டர் பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் அவர்களின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ .மெய்யழகன் அவர்கள் தலைமையில், மாநில செயலாளர் மேலூர் குமார், மாத்தூர் பகுதி செயலாளர் எம் நாகராஜ், திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் எ. நாகராஜ், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எல்.மோசஸ்மூர்த்தி மாத்தூர் பகுதி துணை செயலாளர் எம். நாகராஜன் , அமைப்பாளர் அ.சங்கர், காப்பாளர் செந்தில்குமார், ஆகியோர் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் மன்றத்தை உடன் வந்திருந்தனர்.

அப்போது மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகம் பேனா ஆகியவை வழங்கினார்கள். கடப்பாக்கம் சுப்பிரமணி அனைவரையும் வரவேற்றார். கடப்பாக்கம் ஊராட்சி செயலாளர் குமார். பள்ளி ஆசிரியைகள் சத்யபிரியா,சினேகா, ஆகியோர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ.மெய்யழகன், மாநில செயலாளர் மேலூர் என்.குமார் ஆகியோர் பரிந்துரையின் பேரில், மாநிலத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர் பிரியன் அவர்கள், திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவராக கடப்பாக்கம் சுப்பிரமணி அவர்களை நியமனம் செய்தார். கடப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சமுதாயப் பணி தொடரும் என திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ.மெய்யழகன் கூறினார்.
செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777