February 27, 2021

வானிலை என்பது விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. சென்னை வானிலை இயக்குனர் பாலச்சந்தர் பேச்சு.

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வேளூரில் வேளாண் வானிலை சேவைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேளாண் வானிலை தகவல் சேவை மையம், கால்நடை உற்பத்தி வேளாண்மை துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுக சமுதாய வளர்ச்சிப்பணிகள் இணைந்து நடத்தியது.

அந்த முகாமில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளிடையே கால்நடைகள் குறித்தும் வானிலை குறித்தும் பேசினார். அப்போது வானிலை என்பது வெறும்
மழைக்கானது மட்டுமல்ல. நமது நாடு விவசாய நாடு எந்தத் தொழிலை எவர் எங்கு செய்தாலும் மதியம் ஒரு மணிக்கு சாப்பிட வேண்டும் அந்த சாப்பாட்டை அளிக்கக் கூடியவர்கள் விவசாயிகள், அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

விவசாயத்தையும், கால்நடைகளையும் பிரிக்க முடியாது. நல்ல மழை பெய்தால் விவசாயம் நன்றாக இருக்கும் விவசாயம் நன்றாக இருந்தால் கால்நடைகள் நன்றாக இருக்கும். இந்த சுழற்சி சரியாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். வானிலை என்பது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது எனவே விவசாயிகள் நன்றாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

பின்னர் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு, கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பு செய்ததற்காக பரிசுகளும் வழங்கப்பட்டது. ஆடு மாடுகள் கோழிகளுக்கான உடல் பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தடுப்பூசிகளும் போடப்பட்டது. அதானி அறக்கட்டளை தெற்கு பிராந்திய தலைவர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைந்த வேளாண் வானிலை தகவல் மைய திட்ட அலுவலர் தங்க தமிழ்வாணன், கால்நடை மருத்துவக்கல்லூரி கால்நடை உற்பத்தி வேளாண்மை துறை பேராசிரியர் குமாரவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி தொழில்நுட்ப அலுவலர் டாக்டர் திவ்யலட்சுமி நன்றி கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிமல். இன் – 8939576777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *