June 17, 2021

அறந்தாங்கியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற உள்ளது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார் கிளப்பின் சார்பில், அம்மா டிராபிக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் எதிர் வரும் 26-27-28- ஆகிய தேதிகளில் நடைபெருகிறது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சிறந்து விளங்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கு கொள்ள இருக்கின்றனர்.

போட்டிகளானது பகல், இரவு என்று இருவேலைகளில் நடைபெருகிறது .
முக்கியமான போட்டிகள் இரவு மின்னொலியில் நடைபெற இருக்கின்றன என்று போட்டிகளை நடத்த உள்ள அறந்தை பைட்டிங் ஸ்டார் அணியின் சேர்மன் விஜயராகவன், தலைவர் சதீஷ்குமார், செயலாளர் பாண்டித்துரை, ஆகியோர் கூட்டாக இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் அறந்தாங்கி பைட்டிங் ஸ்டார் அணியினரால் தொடர்ந்து அறந்தை பகுதிகளை சேர்ந்த இளம் சிறார்களுக்கு காலை மாலை என இரு வேலைகளில் நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சிகளை சிறந்த பயிற்றுனர்களான ராகவன், விமல், தேவகுரு, ஆகியோரால் பயிற்சிகள் வழங்கப்பட்டு கூடைப்பந்தாட்ட வீர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு பயிற்ச்சி பெற்ற பல வீரர்கள் தமிழக அணியிலும காவல், கஸ்டம்ஸ், இரயில்வே, கடற்படை மற்றும் கல்லூரி, பல்கலைகழக அணிகளில் விளையாடி நம் அறந்தை நகரு பெருமைத்தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்- ஆனந்த்
நிழல். இன் – 8839476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *