கலசப்பாக்கம் அருகே கிடாம் பாளையத்தில் மினி கிளினிக் திறப்பு விழா…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிடாம்பாளையம் கிராம ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, பொய்யாமொழி, கிடாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் மருத்துவ அலுவலர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில், மாணவிகள் பயணிக்கும் பேருந்து பராமரிப்பு இல்லாத கொடுமை…

திருவண்ணாமலையில்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இயங்கி வரும், மகளிர் விளையாட்டு விடுதியில் பயிலும், மாணவிகள் பயணிக்கும் பேருந்தின் பின்பக்க கண்ணாடி இல்லாமல் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படுகிறது. பெண்பிள்ளைகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? பெண் குழந்தைகளின் உயிர் பாதுகாக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777