March 1, 2021

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min read

கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றியக் குழுவின் ஏழாவது கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய ஆணையர் ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் மாணிக்கம் வரவேற்றார்

.

.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பேசிய இக்குழு துணைத்தலைவர் மாலதி குணசேகரன், “15-வது நிதி கமிஷன் படி, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கும்மிடிப்பூண்டி ஒன்றியம் நேரடியாக அந்த நிதியை ஒன்றிய கவுன்சிலர்கள் வழியாக அந்த நிதியில் மக்கள் பணிகள் செய்திட வேண்டும்” என்றும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்.

சுயேச்சை கவுன்சிலர் மெய்யழகன் கூட்டத்தில் பேசும்போது, “சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் சாலையில், வேதி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதுபோன்ற சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலையில் தொழிற்சாலை அதிகாரிகளை வரவழைத்து அவர்கள் முன்னிலையில், ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார். மேலும், “ராகம் பாளையத்திற்கு பஸ்வசதி, மங்காபுரம் பகுதியில் சுடுகாடு வசதி” போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் பேசும்போது, “கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தரவேண்டும்,”என்று கூறினார். மேலும் “கும்மிடிப்பூண்டியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், வேளாண் அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மேலும், “சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு உரிய வேலை வாய்ப்பை தர வேண்டும். என்றும் ஆனால் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும்” குற்றம்சாட்டினார்.

அவ்வாறே “கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவர் வசதியும், ஒன்றியம் முழுக்க பழைய போஸ்ட் கம்பங்களை மாற்ற கோரியும், கெட்ணமல்லி, ஐயர்கண்டிகை,ஜி.ஆர்.கண்டிகையில் பள்ளி கட்டிட சேதத்தை சரி செய்யவும், சிறுபுழல்பேட்டை முத்துரெட்டி கண்டிகையில் நடமாடும் ரேஷன் கடையை அமைத்து தரவும், பில்லா குப்பத்தில் தரைபாலம் அமைக்கவும், அதானி துறைமுகம் அமைக்கப்பட்டால் கும்மிடிப்பூண்டியில் பழவேற்காடு ஏரி கரையில் உள்ள 8மீனவ கிராமங்கள் உள்ளிட்ட 25 கிராமங்கள் அழியும்” என்பதால், அதனை எதிர்த்து தீர்மானம் இயற்ற கோரினார்.

திமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், “அனைத்து தொழிற்சாலை அதிகாரிகளை வரவழைத்து உள்ளூர் மக்களுக்கு 30% வேலை வாய்ப்பு பெற்று தர வைக்க வேண்டும் என்றும், கோபால்ரெட்டிக் கண்டிகையில் நடமாடும் ரேஷன் கடை வசதி, பாத்தபாளையம் தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும்” என்றும், “கவுன்சிலர்களுக்கு 100 நாள் வேலை அட்டை ஒதுக்கீடு செய்யவேண்டும்” என்றும், “கவுன்சிலர் பதவிக்கு வந்து மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை” என்று பேசியபோது குறுக்கிட்ட ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், “அனைத்து கவுன்சிலர்களும் மக்கள் பணி செய்ய வழிசெய்யப்படும் என்றும், முதற்கட்டமாக அனைத்து கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் உயர்கோபுர மின் விளக்கு வசதி செய்து தரப்படும்” என்றார்.

அதிமுக கவுன்சிலர் ஏ.டி.நாகராஜ் பேசும்போது, “ஊராட்சி தலைவர்கள் கவுன்சிலர்களை மதிப்பில்லை” என்றும், “ஊராட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை” என்று குற்றம் சாட்டினார்.

திமுக கவுன்சிலர் சிட்டிபாபு பேசும்போது, “பாதிரிவேடு பஜாரை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்” என்றும், “கும்மிடிப்பூண்டியில் அரசு அதிகாரிகளை அடிக்கடி இட மாறுதல் செய்வதால் மக்கள் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தில் சேவை தாமதப்படுவதாகவும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் , காப்பீடு அட்டை பெற முகாம்கள் அமைக்க வேண்டும்” என்றும், “பாதிரிவேடு மாதர்பாக்கம் ஏரியில் ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்” என்றும் கூறினார்.

திமுக கவுன்சிலர் சிவா பேசும் போது, “பொம்மாஜி குளம் அருகே கண்ணன் கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு வருவது பொதுமக்க ளை பாதிக்கும் என்பதால் அந்த கடை வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என பேசினார்.

திமுக கவுன்சிலர் கௌரி ஹரிதாஸ் பேசும் போது, “குருவியகரம் காலனி பகுதிக்கு பள்ளி மாணவர்களின் வசதிக்காக பேருந்து சேவையை ஏற்படுத்த வேண்டும்” என்றும், “வழுதலம்பேடு காலனியில் ரேஷன் கடை வசதி, ஆத்துப்பாக்கம் ஏரியின் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும்” எனவும் கூறினார்.

மேலும் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் ரோஜா ரமேஷ்குமார், ரவக்கிளி ஜெயராமன், ஆரோக்கியமேரி, தேவி சங்கர், சுயேச்சை கவுன்சிலர்கள் டி.கே.வி.உஷா, வி.சீனிவாசன், ஏ.சீனிவாசன்,ரேவதி உத்திரகுமார், கலா உமாபதி, காங்கிரஸ் கவுன்சிலர் மதன்மோகன், பாமக கவுன்சிலர்கள் சங்கர், மணிமேகலை கேசவன், திமுக கவுன்சிலர் பாசம் அன்பு, ஜெயந்தி கெஜா, ஜோதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed