தாமரைப்பாக்கத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டருக்கு நாமத்துடன், மாலை அணிவித்து போராட்டம்…
1 min read
இந்திய வரலாற்றில் பெட்ரோல் விலை 100ரூபாயை தாண்டியுள்ளது. டீசல் விலையும் முன் எப்போதும் இல்லாத வகையில் பெட்ரோலுக்கு இணையாக உயர்ந்துள்ளது. மேலும் சிலிண்டர் விலையும் 1000ரூபாயை நெருங்கும் நிலையில் வங்கி கணக்கில் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியமும் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து, நாடு முழுவதும் போராடங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களும், எண்ணெய் நிறுவனங்களும் லாபம் அடையில் வகையில் மக்களின் பணத்தை சுரண்டுவதை குறிக்கும் வகையில் சிலிண்டருக்கு நாமம், மாலை அணிவித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாநில அரசு எரிபொருள் மீதான வரியை குறைத்து மக்கள் மீதான சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777