திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் , சிங்காரவேலரின் 161 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் ஏற்பாட்டில், அதன் பொதுச் செயலாளர் துரை மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறம் திரைப்பட இயக்குனர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோபி நாயனார் கலந்துகொண்டு சிங்காரவேலர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் சிங்காரவேலரின் சிறப்புகள் குறித்தும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகவும் இந்த நிகழ்ச்சியில் கோஷம் இடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க நிர்வாகிகள் தலைவர் எத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் கனகராஜ், ஏசு ராஜன், ஞானமூர்த்தி, கருணாகரன், சேக்தாவூத், செல்வாம்பிகை, ராஜலட்சுமி, முத்து மற்றும் பழவேற்காடு பகுதி மீனவ கிராம நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வாசு,சேகர்,அபூபக்கர்,மதன்,வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777