ஆவுடையார் கோவிலில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…
1 min read
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் மத்திய அரசின் நலத்திட்டங்களான கொரோனா விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம்,மண் வள அட்டை திட்டம், தேசிய ஊட்டச்சத்து திட்டம்,மக்கள் மருந்தகங்கள், வாக்காளர் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நிழ்ச்சியில், அறந்தாங்கி எம்.எல்.ஏ இ.ஏ.ரெத்தினசபாபதி சிறப்பு அழைப்பாளாரக கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் விழாவிற்கு, வந்தவர்களை தஞ்சாவூர் கள விளம்பர அலுவலர் ஆனந்தபிரபு வரவேற்றார். விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவிகாராணி,

வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரதுரை, ஆவுடையார் கோவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உமாதேவி, பிரியா,பாலசுந்தரி, சந்திரா, வட்டார வளர்சி அலுவலர்கள் குமரன், அசோகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கள விளம்பர உதவியாளர் அருண்குமார் நன்றி உரையாற்றினார் .

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777