பத்திரிகையாளர்களின் போராளி டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின், சிறப்பு தபால்தலை வெளியீடு…
1 min read
பத்திரிகையாளர்களின் போராளி அய்யா டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள், நமது தமிழ் நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தை 1990 துவக்கி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் நேரடியாக சென்று இரவு, பகல் பாராமல் அழைந்து, திரிந்து பத்திரிகையாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை கட்டமைத்தார். அப்படிபட்ட பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் அய்யா ரவிந்திரதாஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக,

புதுச்சேரி மாநில அரசின் சார்பில், மறைந்த பத்திரிகையாளர்களின் போராளி தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களுக்கு , மத்திய அரசின் சிறப்பு தபால்தலை வெளியிடப்படவுள்ளது. இதற்கான பணிகளை புதுச்சேரி மாநில பத்திரிகையாளர் யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா அவர்கள் சிறப்பாக செய்துள்ளார்.

மத்திய அரசின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த தபால் தலைகள் நாளை, குற்றாலத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 18வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது. கேரள மாநில பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய துணை தலைவர் தோழர் V.B.ராஜன், கர்நாடக மாநில பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் P.பாஸ்கர்ரெட்டி, புதுச்சேரி மாநில பத்திரிகையாளர் யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா ஆகியோர் முன்னணியில்,

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக் தலைவர், பிரஸ் கவுன்சில் உறுப்பினர் தோழர் K.சீனிவாஸ்ரெட்டி அவர்கள் தபால்தலையை வெளியிட, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் செகரெட்ரி ஜெனரல் மற்றும் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் தோழர் பில்வந்தர் ஜம்மு அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்.

இந்த நிகழ்வின், மூலம் நமது நிறுவனத் தலைவர் மற்றும் நமது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அகில இந்திய அளவில் பேசப்படும்,
ஒன்றுபடுவோம் !
வெற்றி பெறுவோம் !
வரலாறு படைப்போம் !
G. பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777