அறந்தாங்கியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க வினர் சைக்கிள் பேரணி…
1 min read
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டீசல் பெட்ரோல் கேஸ் விலை உயர்வை கண்டித்து திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை, அறந்தாங்கி நகர செயலாளர் ஆனந்த், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பொன்.கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பேரணியை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி செக்போஸ்டில் அவரது தலைமையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது அறந்தாங்கி செக்போஸ்ட் பகுதியில் தொடங்கி
வாகைமரம் சாலை, பெரியகடைவீதி, கட்டுமாவடிசாலை, தாலுக்காஆபீஸ்ரோடு, பட்டுக்கோட்டைசாலை, வழியாக பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலையில் நிறைவடைந்தது.

பேரணியில் முன்னாள் நகர செயலாளர்கள் ராஜேந்திரன், சத்தியசீலன், சித்திரவேல்,
முன்னாள்நகர்மன்றத் தலைவர் மாரியப்பன், கலைஞர் மன்றம் காந்திநாதன், நகர அவைத்தலைவர் தியாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் காசிநாதன்,தி .முத்து துளசிராமன்,ராமசாமி, முருகன்நாராயணன், சக்தி,தமரைசெல்வன்,எம்.என் ராஜா. வின்சென்ட் ராஜேந்திரன் கட்சிநிர்வாகிகள் பெருங்காடு சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
மணிராஜன்,சிவசங்கர் பாரதிராஜா, சிறுபான்மை அணி நசுருதீன்.ஐ.டி விங் விமலாதி . சமங்கலி ஷாஜகான், தமிழ்நாடு
பிச்சைமுகம்மது, பூங்குடிகுமார், தலைமை கழக பேச்சாளர்கள் வழக்கறிஞர் வெங்கடேசன்,
செல்வம் மாவட்ட கவுன்சிலர் இராமநாதன், தொண்டரணி அரசர்குளம் பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777