வெங்கல் அருகே, நேற்று ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் மாயம், இன்று உடலை மீட்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த கரிக்கலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்போது, மணிகண்டன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதை அடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரவு நேரமாகிவிட்டதால் இருட்டில் தேட முடியாமலும் சென்ற தீயணைப்புத் துறையினர் இன்று காலை முதல் மீண்டும் 2வது நாளாக தேடி வந்தனர்.

இந்நிலையில் உடலை மீட்பதில் கால தாமதம் ஏற்பட்டதால் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தாமரைப்பாக்கம் – திருவள்ளூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் நீண்ட தேடுதலுக்கு பிறகு ஆற்றில் குளிக்கும் போது மாயமான இளைஞரை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல். இன் – 893476777