கலசபாக்கம் தொகுதியில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சிம் கார்டுகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்…
1 min read
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சிம் கார்டு 2ஜிபி டேட்டா உடன் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு படிப்பதற்கு, தமிழக அரசு உத்தரவின்படி, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் சிம் கார்டுகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தியதால், போலீஸார் கைது செய்தனர்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு, இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட அமைப்பாளர் சுமதி தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர்களை நிரந்தரபடுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள்மறியலில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் மீது சென்னை காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மாவட்ட துணைத்தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சாரதொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்தியாளர் – மூர்த்தி நிழல். இன்- 8939476777