திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு மின் இணைப்பு பெற, 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி பகுதியில் உள்ள மின் நிலையத்தில் மின் வணிக ஆய்வாளராக இருப்பவர் லோகநாதன். மோவூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர், புதியதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லோகநாதனை நாடியுள்ளார்.

அப்போது மின் இணைப்பு வழங்க 8000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி முதற்கட்டமாக இன்று 5000 ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ்குமார், திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் குமாரிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அவற்றை மின்வாரிய அதிகாரி லோகநாதனிடம் கொடுத்த போது மறைந்திருந்து லோகநாதன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணக்கில் வராத 41,000 ரூபாய் பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777