September 23, 2021

தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழக அரசின் கவனயீர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், அனைவருக்கும் மாநில தலைவர் டாக்டர் எம்.பி முத்தாரப்பன் அழைப்பு…

1 min read
Spread the love

தமிழ்நாடு அரசு எஸ்.சி எஸ்.டி அனைத்து மற்றும் பணியாளர்கள் நல சங்கம் சார்பில் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர்கள் சம்பந்தமான தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் 26 2 2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் காயிதே மில்லத் கல்லூரி சிந்தாதிரிப்பேட்டை சென்னை என்ற இடத்தில் நடைபெறவிருக்கும் முழக்கு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநில தலைவர் டாக்டர் எம்.பி. முத்தாரப்பன் கேட்டுக்கொண்டார்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் அரசாணை எண் 81 மற்றும் 82 ஆட்சியின் 4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை 48 2010 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் பணியில் இளையவராக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நிர்ணயம் செய்யப்பட்டது பணியில் மூத்தவர்களாக உள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் எல்லா தகுதி இருந்தும் அரசாணையில் விடுபட்டுள்ளார் விடுபட்டுள்ள பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் அரசாணை பிறப்பிக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் குறைந்த ஊதியத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் அரசாணை பிறப்பிட தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் குறைந்த ஊதியம் ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்ற தூய்மை பணியாளர்களுக்கு பிற ஊழியர்களை போல் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் தமிழக அரசு சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்திலிருந்து சிபிஎஸ் பென்ஷன் திட்டத்தில் பங்களிப்பு பிடித்தம் செய்யப்பட்டது தற்போது பிடித்தம் செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்து மீண்டும் ஊதியத்தில் பங்களிப்பு நிதி பிடித்தும் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையில் பணிபுரிந்து வரும் தகுதிகாண் பருவம் முடிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர் களுக்கு தூய்மைப் பணியாளர் நிலையிலிருந்து 50% அடிப்படையில் சமையலர் காவலர் பதவி உயர்வு அளித்திட கேட்டுக்கொள்கின்றோம் என பல்வேறு கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என மாநில தலைவர் முத்தாரப்பன் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் டாக்டர் முருகானந்தன் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சி.சரவண காந்தி மாநில பொருளாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர் கண்டன உரையாக டி. காந்தி காமராஜ் மாநில துணைத் தலைவர் எம். மனோகரன் மாநில துணைச் செயலாளர் கே பிரபுதாஸ் மாநிலத் தலைவர் அந்தோணி மாநில துணைத்தலைவர் எம் சந்திரசேகர் மாநில துணை பொதுச்செயலாளர் வி. சுப சந்திரன் மாநில பிரச்சார செயலாளர் ஆத்தியப்பன் கே. கண்ணன் மாநில இணை செயலாளர் எஸ். சிவராமன் மாநில துணை பொதுச்செயலாளர் ஆகியோர் கண்டன உரை ஆற்ற இருக்கின்றனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காளிமுத்து ராமச்சந்திரன் மணியன் அழகு குமார் செந்தில் குமார் இளங்கோவன் விஜய பாண்டியன் குமார் தேவி ரவிக்குமார் ஜனார்த்தனன் சுந்தரேஸ்வரி கீதா சிவநாதன் சாமி சரண்ராஜ் முருகன் ராஜமாணிக்கம் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்

செய்தியாளர் – மூர்த்தி நிழல்.இன் – 893947677

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed