September 23, 2021

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநாட்டில்,” விரைவில் நலவாரியம் அமைக்கப்படும்,” என அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதியளித்தார்…

1 min read
Spread the love

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க 18 ஆவது மாநில மாநாட்டில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க 18 ஆவது மாநில மாநாடு தென்காசி மாவட்டம் குற்றாலம் காசிமேஜர்புரம் முருகன் மகாலில் 20 – 02 – 2021 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், மாநில பொருளாளர் சேலம் ஏ.சேவியர், தேசியக் குழு உறுப்பினர் எம்.சண்முகம், தென்காசி பிரஸ் கிளப் தலைவர் வி.கணபதி பாலசுப்பிரமணியன், சங்க மாவட்ட பொருளாளர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட டி.யூ.ஜே செயலாளர் எம்.முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள், மாநாட்டினை தொடங்கி வைத்து, ஈரோடு கே.எம்.கண்ணண் அவர்களின் முன்னிலையில், விபத்து காப்பீடு பாலிசி பத்திரத்தை வழங்கி பேசியதாவது,
” மாநாட்டில் 10 கோரிக்கைகளை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சுபாஷ் அவர்கள், முன் வைத்துள்ளார்.!இக்கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கும் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்காக அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வரிடம் வலியுறுத்துவேன். மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், இலவச வீடு கட்டி கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

ஆன்மீகவாதிகள் ஸ்ரீகாமாக்ய ருத்ர பீடம் ஸ்ரீசிவஞானகுரு அன்னி ருத்ரன் குருஜி, ஸ்ரீபகவதி பீடம் ஸ்ரீபகவதி ஸ்வாமிகள், ஸ்ரீபூமாத்தம்மன் சித்தர் பீடம் வடபாதி ஆதீனம், திருவேற்காடு சிவஸ்ரீ ஆனந்த ஸ்வாமிகள், ஒம் ஸ்ரீ வாலை போகர் பீடம் ரக்ஷிதா, நாசரேத் ஷீபா நிக்சன், ஆகியோர் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி கவிஞர் டி.எஸ்.கே.மயூரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். பத்திரிகையாளர் சங்க நிறுவனர் டிஎஸ்.ரவீந்திரதாஸ் பவளவிழா படத்தினை பிரஸ் கவுன்சில் உறுப்பினரும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளருமான பில்வந்தர் சிங்க ஜம்மு முன்னிலையில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவர் தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி திறந்து வைத்தார்.

தென்காசி எம்.எல்.ஏ.வும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., மனோகரன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் சண்முகசுந்தரம், குற்றாலம் கணேஷ்தாமோதரன், குறும்பலாப்பேரி குணசீலன், ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளார் ஆர்ஜெவி. பெல், ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பாஜக அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் ரஜினி, மீரான் மருத்துவமனை டாக்டர் அப்துல் அஜீஸ், சுரண்டை டாக்டர் முருகையா, தாய்கோ வங்கி துணைத்தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டு மலரை வெளியிட்டார் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர். தோழர் K. நவாஸ்கனி ! விளவங்கோடு எம்.எல்.ஏ., மற்றும் உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் திருமதி விஜயதரணி, கடையநல்லூர் எம்.எல்.ஏ.,முகம்மது அபுபக்கர், மதிமுக மாவட்ட செயலாளர் தி.மு.ராசேந்திரன் , தென்காசி நகர மதிமுக செயலாளர் வெங்கடேஷ்வரன், சிபிம் தோழர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னதாக, மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களால், தோழர் ரவீந்திரதாஸ் அவர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் தலைவர் மதிமகாராஜா, கேரள மாநில பத்திரிகையாளர் சங்க தலைவர் V.B.ராஜன் முன்னிலை வகித்தார்கள். ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ், பள்ளி சங்க மாநில பொதுச் செயலாளார் நந்தகுமார் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டின் கடைசி நிகழ்வாக மறைந்த பேராசிரியர் பரமசிவன் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி முன்னிலையில் பேராசிரியர் பரமசிவன் படத்தினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் திறந்து வைத்து மாநாட்டு நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்படட தீர்மானங்கள் வருமாறு: டிச.11ம் தேதி பாரதியார் பிறந்த நாளை பத்திரிகையாளர் தினமாக அறிவிக்க வேண்டும். பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.
தாலுகா பத்திரிகையாளர்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைத்திட வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட, பத்திரிகையாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கிடவேண்டும். டெல்லியில் போராடும் விவிசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து
விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை இயக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க தென்காசி மாவட்டத் தலைவர் தோழர் ராசேந்திரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தேசிய செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் கணேசன், தென்காசி பிரஸ் கிளப் தலைவர் கணபதி பாலசுப்பிரமணியன், தென்காசி மாவட்ட தலைமை பத்திரிகையாளர் சங்க தலைவர் பிரகாஷ், விழா குழுவினர் திருவிலஞ்சிகுமரன், வெள்ளத்துரை, மாரியப்பன், பிரம்மநாயகம், நவநீதன் ஆகியோர் செய்திருந்தனர் !
தமிழகம் முழுவதும் 2000 த்திற்கும் அதிகமானோர கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்தனர்.

G.பாலகிருஷ்ணன் நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed