September 23, 2021

சேலம் கிச்சிப்பாளையத்தில், ஸ்ரீ சந்துகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது…

1 min read
Spread the love

சேலம் டவுன், கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவில் உள்ள மேளக்காரர்கள் நடத்தும், ஸ்ரீ சந்து காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.

திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக கிச்சிப்பாளையம் திமுக பிரமுகர் ஜெ.மு.செந்தில், காங்கிரஸ் பொது செயலாளர் பி.கோபிகுமரன், வழக்கறிஞர்கள் சசிகுமார், சுதந்திரம் மற்றும் தலில் விடுதலை கட்சி செயலாளர் மாயா, எஸ்.இளங்கோ (எ) ஜிந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – தங்கதுரை
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed