திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் ஒப்பாரி வைத்து, பாடை தூக்கி போராட்டம்…
1 min read
திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சவப்பாடை கட்டி, ஒப்பாரி வைத்து, மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல்,
கிழ் பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் முன்பு முன்றாவது நாளாக இன்று மாற்றுத்திறனாளி சாலை ஒரைமாக போராட்டம் செய்தனர். கிழ்பென்னாத்தூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்றாவது நாளாக சிறை வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுக்கா செயலாளர் எம்.பாக்கியராஜ் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மேலும் போராட்டங்கள் தீவிரமாகும் என என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையொட்டி திருவண்ணாமலை-காஞ்சி சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொமுச சார்பில், மாநில பேரவைச் செயலாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கூடி நின்று, பணி நிரந்தரத்தை 8 மணி நேரமாக மாற்றவும்,அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்கவும், பாதுகாப்பான பணி நிலைமை, சுழற்சிமுறை பணியிட மாறுதல், விற்பனை நேரம் குறைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777