April 20, 2021

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, நாலரை கோடி விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ்களை சிறுனியம் பலராமன் எம்எல்ஏ வழங்கினார்…

1 min read

மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில் ஊராட்சிமன்ற கட்டிடம் ஏற்கனவே 80களில் கட்டப்பட்ட பழைய அலுவலகத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில், அந்த அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட வேண்டி, ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி அப்பாவு முயற்சிகள் மேற்கொண்டார்.

அதன்படி, தற்போது அந்த ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. அதை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் திறந்து வைத்தார். அப்போது அனுப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சார்லஸ் (எ) உமாமகேஸ்வரன் துணைத் தலைவர் மனோன்மணி கன்னியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கனிஷ்கா, செங்காளா, அம்சவள்ளி, முனுசாமி, ரவிக்குமார், நிர்மலா, வினோதினி, மோகனா, ஊராட்சி உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக உடன் இருந்தனர்.

பின்னர், அனுப்பம்பட்டு ஊராட்சியில் இருக்கக்கூடிய அனைத்து தெருக்களுக்கும், மக்கள் நினைவால் மறந்து போன, தென்னக தலைவர்களை நினைவுபடுத்தும் விதமாகவும், அவர்கள் பெயர்கள் நிலையாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற வகையிலும், தென்னக தலைவர்களுடைய பெயர்கள் தெருக்களுக்கு சூட்டப்பட்டு அந்த பெயர் பலகைகளை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

பின்னர், சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதேபோல், கணேஷ்நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவில் யோகா, சிலம்பாட்டம் மற்றும் தடகள விளையாட்டு பயிற்சிகளையும் துவக்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் அந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் செய்து தருவதாக, எம்எல்ஏ பலராமன் வாக்குறுதி அளித்தார்.

பின்னர் அனுப்பம்பட்டு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுடைய பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை, எம்எல்ஏ பலராமன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் முன்னதாக, தலைமையாசிரியர் தலைமையில், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இறுதியாக, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த, விவசாய கடன் தள்ளுபடியில், அனுப்பம்பட்டு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் மூலமாக, விவசாயிகள் 4.50 (நாலரை) கோடி கடன் பெற்றிருந்தனர். அந்த கடன்களை தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, முத்தாலம்மன் ஆலயம் அருகே அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றது. அதில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

அந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் சார்லஸ் (எ) உமாமகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரோஸ் முன்னிலை வகித்தார், செயலாளர் வாசு அனைவரையும் வரவேற்றார். இயக்குனர் ராமநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து கூட்டுறவு சங்க அனைத்து இயக்குனர்களும் விவசாய கடன் பெற்ற விவசாயிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

அனுப்பம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமனுடன் ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், கவுன்சிலருமான பானுபிரசாத், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனம், தடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஷபிதாபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *