September 23, 2021

அனுப்பம்பட்டு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை பொன்னேரி எம்எல்ஏ பலராமன் திறந்துவைத்தார்…

1 min read
Spread the love

மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கிருஷ்ணவேணி அப்பாவு, இவர் , சமீபத்தில் தமிழக முதல்வர் சுகாதாரத் துறையின் மூலம் அறிவித்த, மினி கிளினிக்கை தங்கள் ஊராட்சிக்கு அமைத்துத் தருமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை தொடர்ந்து, தற்போது அந்த ஊராட்சிக்கு மினி கிளினிக் அமைக்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அந்த புதிய அம்மா மினி கிளினிக்கை, மீஞ்சூர் வட்டார சுகாதார அலுவலர், மருத்துவர் ராஜேஷ் முன்னிலையில், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சார்லஸ் (எ) உமாமகேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் பானுபிரசாத், பொன்னேரி ப.சங்கர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், சசிபாபு, ராமநாதன், வேல்முருகன், ஊராட்சி உதவியாளர் செந்தில்குமார் செட்டியார்கள் சங்க நிர்வாகிகள், ரவி, நித்யா, வினோத், சுதாகர், ஆனஸ்ட், சந்துரு, அங்குசாமி, அழகர், வனஜா, மலர்க்கொடி, சகுந்தலா, ஸ்ரீதேவி, சுமதி, தாட்சாயணி, ரீட்டா, முருகன் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed