திருவண்ணாமலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பாதிப்பு…
1 min read
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் பயணிக்க கொரௌனா தடுப்பு நடவடிக்கை காலங்களில் அலைமோதிய பொதுமக்கள். பணிமனையில் மொத்தம் 29 பேருந்துகளில் 15 பேருந்துகளை தனியார் ஓட்டுநர்களை பயன்படுத்தி 50% அரசு பேருந்துகளை இயக்கியதால் பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிப்பு.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.பி. சி பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்க கோரி, மருத்துவர் சமூக மக்கள், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்று தடை காரணமாக, பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பௌர்ணமி தினமான இன்று, தடையை மீறி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777