திருவள்ளூரில் தேர்தல் விதிமுறை படி கட்சி கொடிகள், கட்சி சுவர் விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர், அதனை ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார்…
1 min read
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி நேற்று வெளியாகி தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திருவள்ளூரில் அரசியல் கட்சியினர் அமைத்துள்ள கொடி கம்பங்கள் சுவர் விளம்பரங்கள் விளம்பர பலகைகளை அகற்ற மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் ஆட்சியருமான பொன்னையா நகராட்சி ஊழியர்கள் உத்தரவிட்டார்.

அதனையடுத்து, திருவள்ளூர் நகர பகுதிகளில் உள்ள அனைத்து கட்சியினரின் கொடி கம்பங்களையும், கட்சியினர் சுவர் விளம்பரங்களையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். அப்போது பொன்னையா அவற்றை ஆய்வு செய்து பின்னர் இதேபோல் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அகற்ற உத்தரவிட்டார்.
செய்தியாளர் – மகேஷ்
நிழல். இன் – 8939476777